சூப்பர்” இறால் ப்ரை”, tasty raal fry recipe in tamil

தேவையான பொருட்கள்
இறால் – 500 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
வெ.பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – 1 இன்ச்
பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் மிக்ஸியில் இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து, அதை இறாலுடன் சேர்த்து, அத்துடன், 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிது தூவி, நன்கு பிரட்டி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

பிறகு இறாலில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, பின் மிதமான தீயில் 6-8 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி விட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெ. பூண்டு சேர்த்து வதக்கி, பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் வேக வைத்துள்ள இறாலை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மசாலா தூள் சேர்த்து 3 நிமிடங்கள் பிரட்டி, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து மீண்டும் 3 நிமிடங்கள் வதக்கி விட வேண்டும்.

இறால் ப்ரை ரெடி!

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors