சூப்பர் டிப்ஸ் ! இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி!, ulunthu kali health tips in tamil samayal kurippu

ஆண், பெண் பேதமின்றி நம்மில் பலரும் இடுப்பு வலியால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது. எத்தனையோ மருத்துவரை பார்த்தும் இதற்கு மட்டும் நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. ஆம்… மருந்துகள் எடுப்பதாலும், உடற்பயிற்சி செய்வதாலும், இடுப்பு வலியை குறைத்துக் கொள்ள முடியுமே தவிர, நிரந்த தீர்வு காண, நம் பாட்டி வைத்தியமே கை கொடுக்கும்.

வைத்தியம் என்றதும் பயந்துவிட வேண்டாம். இது உணவே மருந்து கான்செப்டில் உருவானது. வளர் இளம் பெண்களின் இடுப்பு பலப்படவும், இடுப்பெலும்பு தேய்பாட்டால் அவதிப்படுவோர் குணமாகவும் அக்காலத்தில் பெரியோர் பயன்படுத்தியது உளுந்தங்களி.

ஆம்… நாம் வீட்டில் அன்றாட பயன்படுத்தும் உளுத்தம் பருப்பை வைத்து செய்யப்படும் ஒருவகை இனிப்பு பதார்த்தம் தான் இந்த களி.

இனிப்பு என்றதும் மீண்டும் பயப்பட வேண்டாம். இதில், நாம் இனிப்புக்கான பயன்படுத்தப்போவது கருப்பட்டியே. எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடுமே என்ற அச்சம் வேண்டாம்.

பூப்பெய்திய இளம் பெண்கள், திருமணமான இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பிள்ளை பேறு அடைந்த பெண்கள் என அனைவருக்கும் சிறந்த உணவாகவும், மருந்தாகவும் பயன்படுவது இந்த உளுந்தங்களி.

இடுப்பெலும்புக்கு பலம் சேர்ப்பதோடு, இடுப்பு பகுதியில் நெகிழ்வு தன்மையை ஏற்படுத்தி தருவதால், சுகப்பிரவத்திற்கு இது மிகவும் உதவும் என வீட்டு பாட்டிகள் சொல்ல கேட்டிருப்போம். ஆம்… அந்த உளுந்தங்களி செய்வது எப்படி என்பதைத் தான் இப்பாேது பார்க்க உள்ளோம்.

தேவையான பொருட்கள்: கருப்பு உளுந்து 3 பங்கு, பாசி பருப்பு 1 பங்கு, பச்சரிசி கால் பங்கு, கருப்பட்டி அல்லது வெல்லம் 1 பங்கு, நெய் அல்லது நல்லெண்ணெய் தேவைக்கேற்ப, சுக்கு ஒரு சிட்டிகை, உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை: கருப்பு உளுந்து, பாசி பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, அதை பொடியாக்கி, ஒரு கப் அளவு எடுத்துக்கொள்ளவும். அதை மூன்று கப் தண்ணீரில் கரைக்கவும். அதன் பின், வெல்லம் அல்லது கருப்பட்டி கரைசலை எடுத்துக்கொள்ளவும்.

இப்போது மேற்கொண்ட இரு கரைசலையும், இரும்பு கடாயில் உற்றி கிளறவும். இதில், சுக்கு, உப்பு சேர்க்கவும். ஈரக்கையில், ஒட்டாத பதம் வரும் வரை எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கிளறவும். இந்த பதம் வந்ததும், வாணலியை அடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, ஆறிய பின், அதை பரிமாறவும். சுவைக்காக, அப்போது மீண்டும் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். உலர் பழங்களையும் தேவைப்பட்டால், நெய்யில் வறுத்து சேர்த்துக்கொள்ளலாம்.

ஒரு முறை செய்து பார்த்து சாப்பிட்டால், நிச்சயம் இதன் பலன் கிடைக்கும். மருத்துவரிடம் செல்லாமல், மருந்து வாங்காமல், உடம்புக்கு தேவையான சத்தான பதார்த்தம், வீட்டிலேயே தயாரிவிட்டது. கருப்பு உளுந்தின் நன்மைகளும், அதன் பயனும் தொடரும்….

Loading...
Categories: arokiya unavu in tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors