செட்டிநாடு பன்னீர் மசாலா, panneer masala recipe in tamil, tamil samayal kurippu

தேவையானபொருட்கள்

பன்னீர் – 250 கிராம்
அரைத்த தக்காளி – 1
அரைத்த வெங்காயம் – 1
உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு தேக்கரண்டி

கிராம்பு – 2
பட்டை – சிறிய துண்டு
பிரியாணி இலை – ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு.

அரைப்பதற்கு:

காய்ந்த மிளகாய் – 4, மிளகு – 10, சீரகம் – 1 தேக்கரண்டி, முந்திரி – 10, கசகசா – ஒரு தேக்கரண்டி, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 6 பல், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி.


செய்முறை

பன்னீரை நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். (அம்மியில் அரைத்தால் இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்)

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுத்தம்பருப்பு, வெந்தயம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து சுண்டி வரும் வரை வதக்கவும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கிரேவி நன்றாக வெந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கினால் அசத்தலான பன்னீர் செட்டிநாடு தயார்!

Loading...
Categories: Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors