சைவ மீன் குழம்பு செய்முறை!, saiva meen kulambu recipe in tamil

தேவையானபொருட்கள்

 • வாழைக்காய் – 1
 • மிளகாய்த் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
 • மல்லித் தூள் – 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
 • சோம்பு – 1 தேக்கரண்டி
 • சின்ன வெங்காயம் – 8
 • பச்சை மிளகாய், தக்காளி – தலா 2
 • தேங்காய்த் துருவல் – 2 மேசைக்கரண்டி
 • தாளிப்பு வடகம் – அரை மேசைக்கரண்டி
 • கறிவேப்பிலை – சிறிதளவு
 • உப்பு, புளி, நல்லெண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

வாழைக்காயை வட்டமாகச் சிறிது தடிமனாக நறுக்கி புளித்த மோர் கலந்த தண்ணீரில் போடுங்கள்.

வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கிக்கொள்ளுங்கள். தேங்காயையும் சோம்பையும் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள்.

மண் சட்டியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தாளிப்பு வடகத்தைப் போட்டுத் தாளியுங்கள்.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி, வாழைக்காய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள்.

பிறகு உப்பு போட்டு மூன்று வகை பொடிகளையும் சேர்த்துத் தேவையான தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போக கொதிக்கவிடுங்கள்.

பிறகு தேங்காய் விழுதைச் சேருங்கள். சிறிது நேரம் கொதித்ததும் கறிவேப்பிலையைத் தூவி இறக்குங்கள்.

விருப்பப்பட்டால் மாங்காயைச் சேர்க்கலாம். இறக்கும்போது சிறிய துண்டு வெல்லத்தைச் சேர்க்கலாம்.

Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors