சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?., sotru katralai’s health tips in tamil

சோற்றுக்கற்றாழையை சருமம் மற்றும் தலையில் தேய்ப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகளைப்பற்றி தெரிந்திருக்கலாம். சோற்றுக்கற்றாழை சாறு பருகுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?.

சோற்றுக்கற்றாழை சாறை பருகுவதால் நம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம், அதிலிருக்கும் வைட்டமின், மினரல் மற்றும் அமினோ அமிலங்கள் தான். இனி கற்றாழைச் சாறின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். தினமும் சோற்றுக் கற்றாழை சாறு குடிப்பதால், நம் உணவினை ஜீரணிக்கும் அமைப்பு சுத்தம் செய்யப்படுகிறது.

இதனால் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதில்லை. மேலும், குடலையும் சுத்தம் செய்து மலச்சிக்கலையும் தடுக்கிறது. வயிற்றுப்போக்கு காலங்களில் அதனை குறைக்கவும் உதவுகிறது. உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம். தினமும் இச்சாறை குடிப்பதால், உடலை நல்ல நிலையில் வைத்திருக்க முடியும். அதேபோல், உடல் சக்தியை அதிகரிக்கவும் முடியும்.

சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் சதைப்பகுதியை சிறு துண்டுகளாக நறுக்கி 3 துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும்.பின்பு இவற்றின் மீது சீரகத் தூளை தடவி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக விழுங்கவும்.இவ்வாறு வெறும் வயிற்றில் அதிகாலை உண்டு வர வயிற்றில் உள்ள புண்கள் ஆறும். வயிற்றெரிச்சல் குணமாகும்.காரம், புளி, உப்பு நீக்கி அரை உப்புடன் உணவு உண்ணவேண்டும். 10 தினங்கள் தொடர்ந்து இவ்வாறு உண்ண வேண்டும்.

நாம் மேற்கொள்ளும் முறையற்ற உணவுப் பழக்கத்தால், நம் உடலில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. இதனால் உடலில் நச்சுப் பொருட்கள் உருவாகும் நிலை உள்ளது. இதனை நீக்கவும் இச்சாறு உதவுகிறது.மூட்டுகளை வலுப்படுத்துகிறது.  இதனால் மூட்டு தசைகளில் ஏற்படும் வலி, கட்டி, வீக்கம், சுளுக்கு போன்றவற்றையும் இந்த சோற்றுக்கற்றாழையால் கட்டுப்படுத்தப்படுகிறது

Loading...
Categories: Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors