ஜலதோஷத்தை விரட்டும் பெப்பர் சிக்கன், Cold Pepper Chicken seimurai in tamil

பெப்பர் சிக்கன் ஜலதோசத்தை குணமாக்கும். இருமலை சரி செய்யும். சிக்கனில் பெப்பர் கொஞசம் அதிகமாக சேர்த்தால் சுவை கூடும்.

தேவையான பொருள்கள் :

சிக்கன் – 1/2 கிலோ
மிளகாய் தூள் – 1/2 டிஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகு – 2 டிஸ்பூன்
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
இஞ்சி, பூண்டு விழுது – 1/2 டிஸ்பூன்
கொத்தமல்லி – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

சிக்கனை சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு கிளறி 5 நிமிடம் ஊற வைத்த பிறகு நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனில் உப்பு, மிளகாய் தூள் போட்டு சிறிது தண்ணிர் விட்டு வேக வைத்து கொள்ளவேண்டும்.

பிறகு அதை இறக்கி வைத்து விட்டு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி வேக வைத்த சிக்கனைப் போட்டு கிளறி மிளகாய்ப் பொடி, மஞ்சள்பொடி சேர்த்து உப்பு போட்டு கலக்கி வேகவைத்து ட்ரை ஆனதும் பெப்பர் தூள் சேர்த்து கொத்தமல்லி மேலாக தூவி கிளறி இறக்கி விடவேண்டும்.

பார்க்கவே சூப்பராக இருக்கும். இன்னும் சமைத்து சாப்பிட்டால் சூப்பரோ சூப்பர்.

Loading...
Categories: arokiya unavu in tamil, chicken receipies in tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors