டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம், Dragon Fruit Juice, Recipe, in tamil

டிராகன் பழத்தில் அதிக சத்துக்கள் உள்ளன. டிராகன் ஃபுரூட் ஜூஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்
தேவையான பொருட்கள் :

  • டிராகன் பழம் – 2
  • தேன் – 2 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  • ஐஸ் கட்டி – தேவையான அளவு
  • குளிர்ந்த நீர் – தேவையான அளவு

செய்முறை :

* டிராகன் பழத்தை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள தசைப்பகுதியை ஒரு ஸ்பூன் கொண்டு எடுத்துக் கொள்ளவும்.

* பின் அதனை துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு, தேன் மற்றும் குளிர்ந்த நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

* பிறகு அதனை ஒரு டம்ளரில் ஊற்றி, ஐஸ் கட்டி சேர்த்து பரிமாறினால், டிராகன் ஃப்ரூட் ஜூஸ் ரெடி!

Loading...
Categories: juice receipe in tamil

Leave a Reply


Sponsors