டேஸ்டியான மில்க் கேக் பக்லவா !! ஈஸியா ரெசிபி! நீங்களும் ட்ரை பண்ணுங்க!!, milk cake recipe in tamil, tamil samayal kurippu

ப்லோ சீட் – 10

மில்க் கேக் – 7-8 துண்டுகள்

நறுக்கிய பிஸ்தா

பருப்புகள் – 1/2 கப்

உருக்கிய தெளிவான வெண்ணெய் – 3/4 கப்

சர்க்கரை – 2 கப்

தண்ணீர் – 2 கப்

ரோஸ் வாட்டர் – 5-6 டேபிள் ஸ்பூன்

முதலில் பேக்கிங் ட்ரேயை எடுத்துக் கொள்ள வேண்டும் மடிக்காத ப்லோ சீட்டை எடுத்து கொள்ளவும்

இப்பொழுது இந்த ப்லோ சீட்டை பேக்கிங் ட்ரேயில் விரிக்க வேண்டும் இப்பொழுது வெண்ணெய்யை கொண்டு ப்லோ சீட்டின் மீது தடவ வேண்டும்.

ஒரு பெரிய பெளலை எடுத்து அதில் மில்க் கேக்கை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் பிஸ்தா பருப்பை சேர்க்கவும் உதிர்த்த மில்க் கேக் மற்றும் பிஸ்தா பருப்புகளை நன்றாக கலக்கவும்.

இப்பொழுது பெளலில் உள்ள கலவையில் ஒரு சிறிய பகுதியை எடுத்து பேக்கிங் ட்ரேயில் பரப்ப வேண்டும். மறுபடியும் ஒரு ப்லோ சீட்டை அதன் மேல் வைத்து வெண்ணெய்யை கொண்டு தடவ வேண்டும்.

அப்புறம் மில்க் கேக் மற்றும் பிஸ்தா கலவையை பெளலில் இருந்து எடுத்து இன்னொரு லேயர் பரப்ப வேண்டும். இப்பொழுது இன்னொரு ப்லோ சீட்டை எடுத்து அதன் மேல் வைத்து வெண்ணெய்யை அதில் தடவவும்.

இப்படி லேயர் லேயராக 10 ப்லோ சீட்டுகள் வரை பயன்படுத்த வேண்டும். பத்தாவது ப்லோ சீட் வைக்கும் போது பாஸ்ட்ரியை சற்று அழுத்தி சமமாக இருக்கும் படி செய்யவும். இப்பொழுது வெண்ணெய்யை எடுத்து கடைசி ப்லோ சீட்டில் பரப்ப வேண்டும். இதை ப்ரிட்ஜில் வைத்து குறைந்தது 1மணி நேரம் குளிர்விக்க வேண்டும்.

பிறகு அதை எடுத்து அறை வெப்பநிலை வரும் வரை வெளியில் வைக்க வேண்டும். பிறகு ஒரு கனசதுர வடிவத்தில் சிறிய துண்டுகளாக வெட்டவும். பிறகு பேக்கிங் ட்ரேயை 180 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் ஓவனில் வைத்து 20 நிமிடங்கள் சமைக்க வேண்டும்.

இந்த இடைவேளை நேரத்தில் அடுப்பில் ஓரு கடாயை வைத்து மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும். இப்பொழுது சூடான கடாயில் சர்க்கரையை சேர்க்க வேண்டும். பிறகு தண்ணீர் சேர்க்கவும் நன்றாக சிரப்பை கொதிக்க விடவும்.

ஒரு மிதமான பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். பிறகு ஓவனிலிருந்து ட்ரேயை எடுத்து விடவும். இப்பொழுது பேக்கிங் செய்யப்பட்ட கலவை பக்லவா என்று பெயர். இப்பொழுது காய்ச்சிய சர்க்கரை சிரப்பை பக்லவா மேல் ஊற்றி பரப்ப வேண்டும்.

இப்பொழுது பக்லவா கேக் துண்டுகளை ட்ரேயில் இருந்து எடுக்கவும். சுவையான பக்லவா கேக் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து பரிமாறவும்.

டேஸ்டியான பக்லவா கேக் இப்போ வீட்டிலேயே ரெடியாச்சு.

 

 

Loading...
Categories: cake samayal kurippugal in tamil

Leave a Reply


Sponsors