தக்காளிச் சட்னி, Tomato Chutney recipe in tamil, tamil cooking tips in tamil

தேவையான பொருட்கள்.

தக்காளி. : 4(பொடியாக நறுக்கவும்)

சின்ன வெங்காயம். 12 (பொடியாக நறுக்கவும்)

உளுந்து. : 3 டீஸ்பூன்

மிளகாய் வற்றல். : 5

பூண்டு. : 4 பல்

கறிவேப்பிலை. : சிறிது

கடுகு. : 1 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல். : 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை. :

1.ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 2 டீஸ்பூன் உளுந்து; பூண்டு; மிளகாய் வற்றல்; மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வறுக்கவும்.

2. பிறகு வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

3. தேவைப் பட்டால் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும்.

4. இறுதியில் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.

5.ஆறியவுடன் உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

6. பிறகு கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும்.

7. இட்லி மற்றும் தோசை யுடன் பரிமாறவும்.

Loading...
Categories: Chutney Recipes Tamil

Leave a Reply


Sponsors