தர்பூசணி – ஸ்ட்ராபெர்ரி ஜூஸ், Watermelon – Strawberry Juice, receipe in tamil

தேவையானவை:

  • தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – 4 கப்,
  • லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 4 டேபிள்ஸ்பூன்,
  • எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன்,
  • சர்க்கரை சிரப் – 4 டேபிள்ஸ்பூன்,
  • ஐஸ்கட்டிகள் – தேவையான அளவு,
  • தர்பூசணித் துண்டுகள் (அலங்கரிக்க) – 10.

செய்முறை:

  • தர்பூசணித் துண்டுகள், ஸ்ட்ராபெர்ரித் துண்டுகள், எலுமிச்சைச் சாறு, சர்க்கரை சிரப் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அடிக்கவும். ஒரு கண்ணடி டம்ளரில் 2, 3 ஐஸ் கட்டிகளைப் போட்டு மேலே மிக்ஸியில் அடித்த ஜூஸை ஊற்றி, இரண்டு தர்பூசணித் துண்டுகள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: 8 டேபிள்ஸ்பூன் சர்க்கரையுடன் 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, ஒரு கம்பிப் பதம் வந்ததும் இறக்கினால், சர்க்கரை சிரப் தயார்.

Loading...
Categories: juice receipe in tamil

Leave a Reply


Sponsors