தித்திக்கும் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: தித்திப்பான ஜாங்கிரி செய்முறை, sweet jangiri seimurai in Tamil

தேவையான பொருள்கள்

  • உளுந்து – ஒரு கப்
  • சர்க்கரை – 3 கப்
  • ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை
  • ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை
  • அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

*தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து, நீர் தெளிக்காமல் நன்கு அரைக்கவும்.

*கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு மாவை நன்றாக பந்து போல கெட்டியாகும் வரை அரைக்கவும். அதனுடன் ஃபுட் கலர், அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

*வெள்ளை துணி அல்லது கெட்டியான பாலித்தின் கவரில் ஒரு ஓட்டை போட்டு, அதில் மாவுக் கலவையை வைத்து, மூட்டை போல பிடித்துக் கொள்ளவும்.

*வாணலியில் எண்ணெய் ஊற்றி குறைந்த தீயில் வைத்து, துணியில் உள்ள மாவை முதலில் வட்டமாகவும், பிறகு அதன் மேலேயே சிறு சிறு வட்டங்களாகவும் பிழிந்துவிடவும். எண்ணெய் அதிகச் சூடாக இருக்கக்கூடாது.

*இருபக்கமும் வெந்ததும் அதாவது மொறுமொறுப்பாக வேகக்கூடாது. எடுத்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊறவிட்டு எடுக்கவும்.

*ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறினால் போதும். சுவையான, ஜாங்கிரி தயார்.

Loading...
Categories: Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors