நவராத்திரி பண்டிகையில் பூசணிக்காய் கரி செய்வது எப்படி செய்வது என பார்க்கலாமா, navarathiri pumpkin curry recipe in tamil, tamil samayal kurippu

பூசணிக்காய் -250 கிராம்

எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் தூள் – கொஞ்சம்

சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் – 3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி துருவல் – 1 டேபிள் ஸ்பூன்

படிக உப்பு (ராக் சால்ட்) – சுவைக்கு

மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் (தனியா பவுடர்) – 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

சுகர் – 2 டேபிள் ஸ்பூன்

மாங்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் (நறுக்கியது) – – 1/2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது)- 1 டேபிள் ஸ்பூன்

1. பூசணிக்காயில் உள்ள விதைகளை எல்லாம் முதலில் எடுத்து விட்டு பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

2. பிறகு அதன் தோலை சீவி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

3. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

4. அதனுடன் பெருங்காயம் மற்றும் சீரகம் சேர்க்க வேண்டும்

5. அதனுடன் வெந்தயம் போட்டு நன்றாக வதக்கவும்.

6. இப்பொழுது துருவிய இஞ்சி மற்றும் சிறு துண்டுகளான பூசணிக்காய் போன்றவற்றை போட வேண்டும்.

7. நன்றாக கிளறி விட்டு 2 நிமிடங்கள் வேக விடவும்

8. கொஞ்சம் படிக உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

9. மூடியை கொண்டு மூடி விட்டு மிதமான தீயில் 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்

10. பிறகு மூடியை திறந்து கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்க்கவும்

11. இப்பொழுது மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்க்கவும்

12. அதனுடன் கரம் மசாலா மற்றும் சுகர் சேர்க்கவும்

13. நன்றாக கிளறி மறுபடியும் மூடியால் மூடி விட வேண்டும்

14. 5-7 நிமிடங்கள் அப்படியே சமைக்க வேண்டும்

15. பிறகு மூடியை திறந்து மாங்காய் பொடி சேர்க்க வேண்டும்

16. இப்பொழுது நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்க வேண்டும்

17. அடுப்பை அணைத்து விட்டு சூடாக பரிமாறவும்

 

Loading...
Categories: சைவம்

Leave a Reply


Sponsors