நாக்கில் எச்சில் ஊறும் அருமையான பூண்டு குழம்பு செய்ய வேண்டுமா…?, pondu kulambu recipe in tamil, tamil samayal kurippu

தேவையான பொருட்கள்:

வெள்ளை பூண்டு – 100 கிராம்
சின்ன வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 100 கிராம்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தூள் – 1 ½ ஸ்பூன்
சீரகத்தூள் – ¾ ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ¾ ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¾ ஸ்பூன்
நல்ல எண்ணெய் – 50 கிராம்
கடுகு – ½ ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெள்ளைப்பூண்டினை சுத்தம் செய்து தோலுரித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சுத்தம் செய்து சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். மல்லித்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மசாலா தயார் செய்யவும்.

வாணலியில் நல்ல எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தோலுரித்த வெள்ளைப் பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். இருநிமிடங்கள் கழித்து தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி சுருள வதங்கியவுடன் மசாலாக் கலவையைச் சேர்க்கவும். தேவையான தண்ணீர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க விடவும்.

குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும். எண்ணெய் பிரிந்ததும் இறக்கி விடவும். இப்போது சுவையான பூண்டு குழம்பு தயார்.

Loading...
Categories: kulanthai unavugal in tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors