நாட்டுக்கோழி குழம்பு, chicken kulambu seimurai in tamil, tamil samayal kurippu

ஒரு தடவை செய்து பார்த்து விட்டு அனுபவத்தை பகிரலாம்

தேவையான பொருட்கள்:

நாட்டுகோழி 1 கிலோ
தேங்காய் 1/2 மூடி
கறிவேப்பிலை கொஞ்சம்
சின்ன வெங்காயம் 18 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் தூள் 5 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 + 1/4 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி

அம்மிகல்லில் நசுக்கிய மிளகு 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
சோம்பு 1 தேக்கரண்டி
கசாகசா 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு 15
கடுகு 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 15 தேக்கரண்டி

 

செய்முறை:

1. நன்கு சுத்தம் செய்ய பட்ட நாட்டுக்கோழி துண்டங்களை 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் கொண்டு நன்றாக பிசிறி 30 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

2. அதன் பிறகு நாட்டுக்கோழியை நன்றாக இரண்டு முறை தண்ணீரில் அலசி கொள்ளவும்.

3. இப்பொழுது வடைச்சட்டியில் எண்ணெய் விடாமல் கசகசா, சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வாசனை வரும் வரை நன்றாக சில நொடிகள் வரை வதக்கவும்.

4. இப்பொழுது மிக்ஸியில் தேங்காய் அரை மூடி மற்றும் வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களையும் சேர்த்து நன்றாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

5. இப்பொழுது பிரஷர் குக்கரில் நாட்டுக்கோழி துண்டங்களை சேர்த்து 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்துகோங்க , அதில் நாட்டுக்கோழி துண்டுகள் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரின் மூடியை மூடி 10 நிமிடங்கள் வரை அடுப்புல வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

6. நாட்டுக்கோழி நன்றாக வெந்துவிட்டதா என்று உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.

7. இப்பொழுது ஒரு இரும்பு வடசட்டியை எடுத்து கொள்ளவும், அதில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும்.

8. பிறகு அதில் கறிவேப்பில்லை சேர்த்து நன்றாக வதக்கவும். பின்னர் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.

9. பிறகு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் வரமிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மிளகு தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய குரு மிளகை சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

10. இப்பொழுது வேகவைத்துள்ள நாட்டுக்கோழி துண்டங்களை மற்றும் நாட்டுக்கோழி சாறு சேர்த்து அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு தூள் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.

11. வடச்சட்டி மூடியை மூடி நன்றாக சிறுதீயில் 10 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.

நாட்டுக்கோழி பிரட்டல்

தேவையான பொருட்கள்:

வேகவைத்த நாட்டுகோழி துண்டங்கள்
சின்ன வெங்காயம் 10 ( பொடியாக நறுக்கியது)
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது )
பச்சை மிளகாய் 3 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 1 தேக்கரண்டி
கரம்மசாலா தூள் 1 தேக்கரண்டி
குரு மிளகு தூள் 4 தேக்கரண்டி
நாட்டுக்கோழி குழம்பு 3 கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரச்செக்கு கடலெண்ணய் 2 மேஜைக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வடச்சட்யில் கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

2 அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும். அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

3. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்துகோங்க நன்றாக வதக்க வேண்டும்.

4. அதில் கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது அதில் குழம்புல இருந்து சேகரிக்க பட்ட நாட்டுக்கோழி துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

5. அதில் நாட்டுக்கோழி குழம்பை ஊற்றி அதில் , அம்மிகல்லில் நசுக்கிய குரு மிளகை போட்டு தேவையான அளவிலான உப்பு தூளையும் சேர்த்து நன்றாக கிளறி நாட்டுக்கோழி பிரட்டலை எடுத்து பரிமாறவும்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors