நாண் ரொட்டி!, naan rotty recipe in tamil, Chord Bread tamil cooking tips

தேவையான பொருட்கள்
மைதா – 2 கப்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன்
தயிர் – 1/ 4 கப்
துருவிய பூண்டு – 3 டீஸ்பூன்
சமையல் சோடா – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1/4 கப்

செய்முறை
வெண்ணெய், பூண்டு, கொத்தமல்லி இலை சேர்த்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் சோடா, உப்பு, சமையல் சோடா, சேர்த்து நன்கு கலந்து தயிர் சேர்த்தும் நன்கு கலந்து கொள்ளவும்.

மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக, கெட்டியாக மாடிவ பிசைந்து 20 அல்லது 30 நிமிடங்கள் தனியாக எடுத்து வைக்கவும்.

மாவை சிறிது சிறிதாக பந்து வடிவில் உள்ளங்கையில் வைத்து உருட்டிக் கொள்ளவும்.
உருட்டிய மாவை உலர்ந்த மைதா மாவில் பிரட்டி பூரிக்கட்டையில் சப்பாத்தி,ரொட்டிக்கு தேய்ப்பது போல் தேய்த்துக் கொள்ளவும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து நாண்ணை இட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். அதிகமான தீயில் 2 நிமிடங்களில் நாண் கலர் மாறிவிடும்.

நாண் தயாரானதும் பூண்டு வெண்ணெய் அதன் மேலாக தடவி அசைவ மற்றும் சைவ குழம்பு உடன் சேர்த்து சாப்பிடலாம்.

Loading...
Categories: Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors