நாவூறச் செய்யும் நாவல்பழ கேக், tasty naval pala cake recipe in tamil

என்னென்ன தேவை?

நாவல்பழ விழுது ஒரு கப்

பொட்டுக்கடலை மாவு கால் கப்புக்குக் கொஞ்சம் அதிகம்

சர்க்கரை முக்கால் கப்

நெய் கால் கப்

எப்படிச் செய்வது?

நாவல்பழ விழுது, சர்க்கரை, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, அடுப்பில் வைத்துக் கிளறுங்கள்.

சர்க்கரை கரைந்து, சேர்ந்தாற்போல கெட்டியாக வரும்போது நெய்விட்டுக் கிளறுங்கள். குறைவான தீயில் கிளறினால் போதும்.

நன்றாக இறுகி, அல்வா பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியதும் துண்டுகள் போடலாம்.

கிருஷ்ணருக்குப் பிடிக்கும் என்பதால் நாவல்பழத்தை வைத்துப் படைப்பார்கள்.

துவர்ப்பும், புளிப்புமான அதன் சுவை, குழந்தைகளுக்குப் பிடிக்காது.

இப்படி அல்வாவாகச் செய்துகொடுத்தால் விரும்பிச் சுவைப்பார்கள்

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors