பனானா கேக், BANANA cake , seimurai in tamil

தேவையான பொருட்கள் :

  • செல்ஃப் ரெய்சிங் மாவு – ஒன்றரை கப்
  • பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
  • ப்ரவுன் சுகர் – ஒரு கப்
  • முட்டை – 2
  • வாழைப்பழம் – 2
  • மார்ஜரின் (Margarine) – 200 கிராம்
  • பனானா எசன்ஸ் – ஒரு தேக்கரண்டி
  • பால் – 2 கரண்டி (தேவைப்பட்டால்)
  • காய்ந்த திராட்சை / நட்ஸ் – சிறிது
  • செய்முறை :

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து சலித்துக் கொள்ளவும். வாழைப்பழத்தைக் கூழாக அரைத்துக் கொள்ளவும். முட்டையைத் தனியாக அடித்து வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ப்ரவுன் சுகர் மற்றும் மார்ஜரினைப் போட்டு நன்கு அடித்துக் கொள்ளவும்.

அதனுடன் அடித்து வைத்துள்ள முட்டையைச் சேர்த்துக் கலக்கவும்.

க்ரீம் போல வரும் வரை நன்கு கலக்கவும்.

பிறகு வாழைப்பழக் கூழைச் சேர்த்து அடிக்கவும்.

அதனுடன் சிறிது சிறிதாக மாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

பிறகு எசன்ஸ் மற்றும் திராட்சை / நட்ஸ் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

பட்டர் தடவிய மைக்ரோவேவ் ட்ரேயில் சிறிது மாவு தூவி, கலந்து வைத்துள்ள கலவையை ஊற்றி, மைக்ரோவேவில் வைத்து ஹையில் 10 / 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.

டூத் பிக்கை கேக்கின் உள்ளே விட்டுப் பார்த்து, ஒட்டாமல் வரும் போது எடுத்து ஒரு தட்டில் மாற்றி ஆறவிட்டு துண்டுகள் போடவும்.

டேஸ்டி பனானா கேக் ரெடி.

Loading...
Categories: இனிப்பு வகைகள்

Leave a Reply


Sponsors