பருப்பு போளி எப்படிச் செய்வது?, aruu boli seimurai in tamil, tamil cooking tips

என்னென்ன தேவை?

மைதா மாவு – 2 கப்,
கடலைப்பருப்பு – 2 கப்,
வெல்லம் – 2 கப்,
தேங்காய் – 1 மூடி,
ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 1/2 கப்,
உப்பு – 1 சிட்டிகை,
அரிசி மாவு – சிறிது.

எப்படிச் செய்வது?

மைதா மாவில் உப்பு, நெய் 2 டீஸ்பூன், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசையவும். மாவை  இழுத்தால் ரப்பர் போல் வர வேண்டும். இதன் மேல் ஒரு கை எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊறவிடவும். கடலைப் பருப்பை 1 மணிநேரம் ஊறவைத்து நன்கு வேகவைத்து வடித்து கொள்ளவும். தேங் காயை துருவி கடலைப் பருப்பையும் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.

கடாயில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வெல்லம் கரைந்ததும் வடிகட்டி, மீண்டும் கடலைப்பருப்பு விழுது, ஏலக்காய் பொடி சேர்த்து தண்ணீர் வற்றும் வரை கிளறி இறக்கவும். ஆறியதும் சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பிசைந்த மைதாவிலிருந்து சிறிய உருண்டை எடுத்து கிண்ணம் போல் செய்து அதனுள் பூரண உருண்டையை வைத்து நன்கு மூடவும். பின்பு அரிசி மாவு தொட்டு மெல்லியதாக இடவும். தோசைக்கல்லை காயவைத்து திரட்டிய போளியை போட்டு, மிதமான தீயில் எண்ணெயையும், நெய்யும் கலந்து அதன் மேல் ஊற்றி இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுத்து பரிமாறவும்

Loading...
Categories: Sambar Recipe in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors