பாதாம் பால், bathaam milk recipe in tamil, tamil cooking tips

தேவையான பொருட்கள் 
ஆரோக்யா ஃபுல் கிரீம் மில்க் 1 லிட்டர்
மில்க் மெயிட் கண்டன்சுடு மில்க் 400 கிராம்
பாதாம் 100 கிராம்
முந்திரி பருப்பு 75 கிராம்
ஏலக்காய் 4
குங்கும பூ 1 சிட்டிகை
பாதாம் எசன்ஸ் 3 துளிகள்
நெய் 1 மேஜைக்கரண்டி

செய்முறை 
1. ஆரோக்கியா ஃபுல் கிரீம் மில்கை அடுப்புல நான்ஸ்டிக் பாத்திரத்தில் வைத்து காய்ச்சி வைக்கவும்.

2. பாதாம் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின்னர் அடுப்புல பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் ஊறவைத்த பாதாம் பருப்புகளை போட்டு நன்றாக 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

3. பிறகு பாதாமில் தண்ணீர் வடிக்கட்டி அதில் பாதாமை குளிந்தநீரில் கழுவிய பின்னர் பாதாமை பிதுக்கவும் அதன் மேல் தோல் நீங்கி விடும்.

4. சிறிதளவு பாலில் குங்கும பூவை 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின்னர் மிக்ஸியில் பாதாம் பருப்பை போட்டு பிறகு முந்திரி பருப்பையும் போட்டு நன்றாக நைசாக அரைத்து கொள்ள வேண்டும். பாதாமில் ஒரு 4 முந்திரியில் இருந்து எடுத்து வைக்கவும்.

5. இப்பொழுது வடச்சட்டியை அடுப்புல வைத்து நெய்யை ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை மற்றும் பாதாம் பருப்பை போட்டு நன்றாக பொன்னிறமாக வறுக்கவும்.

6. இச்சமயத்துல நான்ஸ்டிக் அகன்ற பாத்திரத்தில் காய்ச்சிய பாலை சுண்ட காய்ச்சவும் பாலை மரக்கரண்டியால் கிளறி கொண்டே இருக்க வேண்டும். அடுப்பு சிம்மில் இருப்பது மிக மிக அவசியம்.

7. பால் சுண்ட தொடங்கிய உடன் அதில் அரைத்து வைத்த விழுதை பாலில் கலந்து கிளறி கொண்டே இருக்க வேண்டும்.

8. 5 நிமிடங்கள் கழித்து கண்டன்சுடு மில்க்கை சேர்க்கவும் பிறகு கிளறி கொண்டே இருக்கவும். இந்த கலவை இன்னொரு 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். இச்சமயத்தில் ஏலக்காய் பொடியையும்சேர்த்து நன்கு கிளறவும். பாதாம் எசன்ஸையும் சேர்த்து நன்கு கிளறவும் .

9. பிறகு பால் கலவையை ஆற வைக்கவும். அதில் நெய்யில் வறுத்து வைத்துள்ள பருப்பு வகைகளை சேர்க்கவும். ஃப்ரிஜ்ஜில் 2 மணிநேரம் வைத்து குளுமையாக பரிமாறவும்.

குறிப்பு

1. கண்டன்சுடு மில்கை பயன்படுத்த முடியாவிடில் சர்க்கரை 1/4 கப் சேர்த்து கொள்ளவும். அதில் 200 கிராம் சர்க்கரை இல்லாத கோவா வை சேர்த்து கிளற வேண்டும்

Loading...
Categories: juice receipe in tamil

Leave a Reply


Sponsors