பால்கோவா: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல், paal kova special receipe in tamil, tamil samayal kurippu

கிருஷ்ணனுக்கு பால் பொருட்கள் என்றால் கொள்ளைப் பிரியம். எனவே கிருஷ்ணன் பிறந்த நாளான கிருஷ்ண ஜெயந்தியன்று சிம்பிளாக பால் கொண்டு செய்யப்படும் பால்கோவாவை செய்து படைக்கலாம். மேலும் பால்கோவா வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.

சரி, இப்போது அந்த பால்கோவாவை எப்படி சிம்பிளாக செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

முதலில் பாலை ஒரு கெட்டியான அகன்ற வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்து பால் பாதியாக குறையும் வரை மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.

பால் பாதியாக குறைந்ததும், தீயை குறைத்து மீண்டும் 20 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இப்போது பால் கெட்டியான நிலையில் இருக்கும். இந்நிலையில் கரண்டி கொண்டு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

பாலில் உள்ள நீர் வற்றி, கெட்டியான பதத்திற்கு வரும் போது, அதில் சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் மீண்டும் நன்கு கிளறி, தண்ணீர் முற்றிலும் வற்றி பால்கோவா பதத்திற்கு வரும் போது இறக்கினால், சுவையான பால்கோவா ரெடி!!!

குறிப்பு:

விருப்பமுள்ளவர்கள், இத்துடன் சிறிது ஏலக்காய் பொடி மற்றம் முந்திரி, பாதாம் போன்றவற்றை நறுக்கி தூவிக் கொள்ளலாம். இதனால் பால்கோவாவின் சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

Loading...
Categories: Saiva samyal, Samayal Tips Tamil, Tamil Cooking Tips, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors