பால் பணியாரம், milk sweet recipe in tamil, tamil samayal kurippu

என்னென்ன தேவை?

பச்சரிசி- 100கிராம்
உளுந்து- 75கிராம்
பசும்பால்- 200மில்லி
தேங்காய்பால்- ஒருடம்ளர்
சர்க்கரை- 100கிராம்
ஏலக்காய்பொடி- சிறிதளவு
எண்ணெய்- தேவையானஅளவு


எப்படி செய்வது?

பச்சரிசியையும், உளுந்தையும் 5 மணி நேரம் ஊற வைத்து, கிரைண்டரில் ஒரே சமயத்தில் போட்டு மை மாதிரி அரைத்து வைக்கவும். அதே போல் பாலை நன்றாக காய்த்து, அதனுடன் தேங்காய்பால் மற்றும் ஏலக்காய் பொடி, சர்க்கரையை சேர்க்க வேண்டும். பின்னர் அதை ஒரு பாத்திரத்தில் வைத்திருக்கவும். அதன் பின் தயாராக இருக்கும் மாவை சிறிய அளவிலான உருண்டையாக உருட்டி, எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். அந்த உருண்டைகளை கொதிக்கிற வெந்நீரில் போட்டு எடுத்து, தயாராக வைத்துள்ள பாலில் போடவும். இப்போது சுவையான பால் பணியாரம் ரெடி…

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors