பாஸ்தா சூப் செய்முறை….!, Pasta Soup Recipe….! in tamil samayal kurippu

தேவையான பொருட்கள்:

ஏதாவது பாஸ்தா இரண்டு வகை – தலா – 1/2 கப்
வெட்டிய கரட் — 1/2 கப்
வெட்டிய அஸ்பராகஸ் – – 1/2 கப்
வெட்டிய பூசணிக்காய் — 1/4 கப்
வெட்டிய தக்காளி – – 1/2 கப் (2)
உப்பு – தேவையாக அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
பார்மஜான் சீஸ் — 2 மேசைக்கரண்டி
காய்ந்த பேசில் — 1/4 தேக்கரண்டி

செய்முறை:

பாஸ்தாவை 4 கப் தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
பாஸ்தா அரைவாசி வெந்ததும் அதனுள் வெட்டிய காய்கறிகளைப்போட்டு மூடி வேகவைக்கவும்.

காய்கறிகள் வெந்ததும் சீஸ், உப்பு, மிளகுத்தூள், பேசில், ஒரெகானோ சேர்த்து கிளறி இறக்கவும்.

சுவையான பாஸ்தா சூப் தயார். சூடாக அருந்தவும்.
இதற்கு விருப்பமான காய்கறிகளைப் போட்டும் செய்யலாம். உள்ளி, வெங்காயமும் சேர்க்கலாம்.

Loading...
Categories: Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors