பிட்டு, pittu seimurai in tamil,tamil samayal kurippu

என்னென்ன தேவை?

  • பாசிப்பருப்பு – 3/4 கப்
  • கடலைப்பருப்பு – 1/4 கப்
  • பச்சைமிளகாய் – 6
  • பெரிய எலுமிச்சைப்பழம் – 1
  • உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

  • கடுகு – 1/2 டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்,
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை – 1 கொத்து.

எப்படிச் செய்வது?

பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் ஒன்றாக 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

இட்லி தட்டில் எண்ணெய் தேய்த்து அரைத்த மாவை ஊற்றி, 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.

நன்கு ஆறியதும் உதிர்க்கவும்.

பச்சைமிளகாயையும் உப்பையும் மிக்சியில் அரைக்கவும் கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, 1/4 கப் தண்ணீர், பச்சைமிளகாய் விழுது சேர்க்கவும்.

தண்ணீர் கொதி வந்தவுடன் உதிர்த்த இட்லியை சேர்த்து நன்கு கிளறவும்.

அடுப்பை அணைத்த பிறகு எலுமிச்சைப்பழத்தை பிழிந்து கலந்து பரிமாறவும்.

Loading...
Categories: Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors