புத்தம் புது ‘பூ’ – தாமரைப் பூ கூட்டு, thamarai poo kuddu seimurai in tamil samayal kurippu

பூக்கள் அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் உகந்தவை. நம் முன்னோர்கள் பல வகையான பூக்களையும் உணவாகப் பயன்படுத்தி, உடல் நலத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள். நாம் தான் காலப்போக்கில் பூக்களைத் தலையில் சூடவும் பூஜைக்கும் மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினோம். “ஒவ்வொரு பூவுக்கும் ஒவ்வொரு குணமுண்டு. அதைத் தெரிந்துகொண்டு சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் சமைத்தால், நாமும் ஆரோக்கியத்துடன் வாழலாம்” என்கிறார் கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜபுஷ்பா. கூட்டு, பாயசம், பொடி எனப் பூக்களை வைத்தே அசத்தல் விருந்து படைக்கலாம் என்று சொல்லும் இவர், அவற்றில் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார்.

தாமரைப் பூ கூட்டு

என்னென்ன தேவை?

தாமரைப் பூ 2 ( நறுக்கியது)

பாசிப் பருப்பு 2 கைப்பிடியளவு

மிளகுத் தூள்,

மிளகாய்த் தூள், சுக்குத் தூள் தலா அடை டீஸ்பூன்

மஞ்சள் தூள் – சிறிதளவு

எலுமிச்சைச் சாறு 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 1 கைப்பிடியளவு ( நறுக்கியது)

உப்பு தேவையான அளவு

தாளிக்க

நெய் சிறிதளவு

கடுகு, உளுந்து தலா கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லித் தழை சிறிதளவுஎப்படிச் செய்வது?

பாசிப் பருப்பை வேகவையுங்கள். வாணலியில் நெய் விட்டு, கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்குங்கள்.

அத்துடன் தாமரைப் பூவைச் சேர்த்து நன்றாக வதக்கி, சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து வேகவையுங்கள்.

பிறகு வேகவைத்த பாசிப் பருப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள், மிளகாய்த் தூள், சுக்குத் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி பச்சை வாசனை போகும்வரை வேகவிடுங்கள்.

இறக்கும் முன் எலுமிச்சைச் சாறு, மல்லித் தழை சேருங்கள். இந்தக் கூட்டு, சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்கு ஏற்றது.

தாமரைப் பூ கூட்டு இதயத்துக்கு மிகவும் நல்லது என்று சொல்வார்கள்.

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors