பூப்பெய்த பெண்களுக்கு உளுந்தங்களி செய்முறை!, ulunthankali seimurai in tamil, tamil samayal muraikal

தேவையானபொருட்கள்

  • பச்சரிசி – 2கப்
  • உளுந்து – அரை கப்
  • பனை வெல்லம் – 2 கப்
  • நல்லெண்ணெய், சுக்கு, ஏலக்காய்த்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை

வெறும் வாணலியில் உளுந்தை போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும். அத்துடன் அரிசியை சேர்த்து மிஷினில் நல்ல நைஸ் மாவாகத் திரித்து வைத்துக் கொள்ளவும்.

இது தான் களி மாவு. பனை வெல்லத்தை பொடித்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அடுப்பில் அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி கொதி வரும் போது அரைத்த அரிசி, உளுந்து மாவை சிறிது சிறிதாக தூவிக் கொண்டே, கை விடமால் கிளறவும்.

நடு நடுவே நல்லெண்ணெய் விட்டு கட்டி தட்டாது கிளறவேண்டும். மாவு சிறிது வெந்ததும் ஏலக்காய்த்தூள், சுக்குப் பொடி, எண்ணெய் சேர்த்து கிளறிவும். பிறகு களி உருண்டு வரும் பதத்தில் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors