பெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல், Girls hair styles in Tamil methods

பெண்களின் முகத்திற்கேற்ற ஹேர் ஸ்டைல்
பொதுவாக பெண்கள் வெளியில் செல்லும் போது தமது சிகை அலங்காரத்தில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு தமது முக அமைப்பிற்கு ஏற்றவாறு சிகை அலங்காரம் செய்யத்தெரிவதில்லை. இதனால் அவர்களுடைய முக அழகே கெட்டுவிடுகின்றது. சிகை அலங்காரத்தில் ஒவ்வொரு முக அமைப்பிற்கும் பொருந்தக்கூடியவாறு சிகை அலங்கரிப்பு இருக்கின்றது. எந்த முக அமைப்பிற்கு எந்த ஹேர் ஸ்டைல் பயன்படுத்தினால் அழகாக இருக்கும். இவற்றை பெண்கள் தெரிந்து கொள்வது நல்லது.

நீள்வட்ட முகம் உடையவர்கள்

நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு பெரும்பாலான சிகை அலங்காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ ஹேர்,போனி டைல் போன்ற சிகை அலங்காரங்கள் மிக அழகாக இருக்கும். ஆனால் தலையில் நடுவாகு எடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். அப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.

சதுர முக வடிவம் உடையவர்கள்

சதுர முக வடிவமுடையர்களிற்கு நீளமான கூந்தல் மிகவும் நன்றாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி செய்யவேண்டும். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்களை தவிர்த்துவிடுங்கள். குட்டை முடியாக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால், கூந்தலை குட்டையாக வெட்டும் போது முடியை மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு அதிக அழகை கொடுக்கும்.

வட்ட முக வடிவம் உடையவர்கள்

வட்ட முகமுடையவர்களின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் அவர்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்துகொள்ளலாம். சுருட்டை முடி காணப்பட்டால் அதை ஸ்ரேட்னிங் செய்யலாம். அப்படி செய்யும் போது வட்ட முக வடிவம் உடையவர்களின் முகம் சற்று நீளமாக தோன்றும்.

Loading...
Categories: Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors