பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல், pongal special, kalkandu pongal seivathu eppadi in tamil tamil samayal kurippukal

இந்த பொங்கலுக்கு கல்கண்டு பொங்கலை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். இப்போது கல்கண்டு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்

தேவையான பொருட்கள் :

  • கல்கண்டு – 400 கிராம்
  • பச்சரிசி – 500 கிராம்
  • பால் – 1 லிட்டர்
  • முந்திரி – 10௦
  • திராட்சை – 10௦
  • நெய் – 200 கிராம்
  • ஏலக்காய் தூள் – சிறிதளவு

செய்முறை :

* கல்கண்டை பொடித்து கொள்ளவும்.

* பச்சரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து ரவை போல் உடைத்து கொள்ளவும்.

* அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சவும்.

* பால் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் உடைத்த பச்சரிசியை சேர்த்து நன்றாக குழைய வேகவைக்கவும்.

* இடையிடையே நெய்யை சேர்க்கவும்.

* பிறகு அதில் பொடித்த கல்கண்டை சேர்க்கவும்.

* கல்கண்டு கரைந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து நெய் ஊற்றி நன்கு கலந்து இறக்கி 10 நிமிடம் கழித்து பரிமாறவும்.

* சூப்பரான கல்கண்டு பொங்கல் ரெடி.

Loading...
Categories: pongal receipies in tamil, சைவம், தமிழ்

Leave a Reply


Sponsors