பொடுகைப் போக்க தலைக்கு பேக்கிங் சோடாவை எப்படி பயன்படுத்துவது?, remove poduku tips in tamil

தலையில் முடி அதிகம் கொட்டுவதற்கு ஓர் காரணமாக இருப்பது பொடுகு தான். தற்போது மாசு நிறைந்த சுற்றுச்சூழலால் தலையில் அழுக்குகள் அதிகம் சேர்ந்து, பொடுகுகளாக மாறுகின்றன. இப்படி பொடுகுகள் அதிகரிப்பதால், மயிர்கால்கள் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கின்றன. இந்நிலையைத் தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பேக்கிங் சோடா.

அதுமட்டுமின்றி, பேக்கிங் சோடா முடியை வலிமையாக்குவதோடு, முடியின் நிறத்தையும் பாதுகாக்கும். சரி, இப்போது பேக்கிங் சோடாவை எப்படி தலைக்கு பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

படி: 1

முதலில் தலையை வெதுவெதுப்பான நீரினால் நன்கு அலச வேண்டும். குறிப்பாக ஷாம்பு, கண்டிஷனர் எதையும் பயன்படுத்தக் கூடாது.

படி: 2

தலையை நீரில் நன்கு அலசிய பின், பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி 3 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பேக்கிங் சோடாவில் உள்ள pH பொடுகுகளை உண்டாக்கும் கிருமிகளை அழித்து வெளியேற்றிவிடும்.

படி: 3

பின் வெதுவெதுப்பான நீரில் தலையை நன்கு அலச வேண்டும். பேக்கிங் சோடா பொடுகுகளை மட்டுமின்றி, தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையையும் நீக்கிவிடும்.

குறிப்பு

உங்களுக்கு பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால், வாரம் இரண்டு முறை இச்செயலை மேற்கொள்ள வேண்டும். தினமும் பயன்படுத்தினால் தலையில் எண்ணெய் பசை முற்றிலும் நீங்கி, பின் அதுவே பொடுகை அதிகரித்துவிடும். எனவே வாரத்திற்கு 2 தடவைக்கு மேல் மேற்கொள்ள வேண்டாம்.

மென்மையான முடி

முக்கியமாக பேக்கிங் சோடா பொடுகை நீக்கிவிடுவதோடு, முடியையும் பட்டுப்போன்று மென்மையாக்கிவிடுவதுடன், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

ஹேர் ட்ரையர் கூடாது

தலைக்கு குளித்த பின்னர் முடியை உலர்த்த ஹேர் ட்ரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்து, இயற்கையான முறையில் முடியை உலர்த்துங்கள். இல்லாவிட்டால், முடியின் ஆரோக்கியம் பாழாவதோடு, மயிர் கால்களும் அதிலிருந்து வெளிவரும் வெப்பத்தினால் வலுவிழந்து உதிர ஆரம்பிக்கும்.

Loading...
Categories: Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors