மனங்கவரும் சுவையான பீட்ரூட் சப்பாத்தி, tasty beetroot sappaththi seimurai in tamil, tamil samayal kurippu

தேவையானவை:

கோதுமை மாவு – ஒரு கிலோ,

பீட்ரூட் – 2,

சர்க்கரை – 200 கிராம்,

நெய் – 50 கிராம்,

ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை,

ஆப்பசோடா – ஒரு சிட்டிகை

முந்திரிப்பருப்பு – 10,

பாதாம்பருப்பு – 10,

பால் பவுடர் – 3 டீஸ்பூன்.

செய்முறை:

பீட்ரூட்டை நன்கு சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, வேகவைத்து எடுக்கவும். முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்து, வேகவைத்த பீட்ரூட் சேர்த்து, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

கோதுமை மாவுடன் அரைத்த பீட்ரூட் விழுது, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பால் பவுடர், ஆப்பசோடா கலந்து, சிறிதளவு நீர் தெளித்து நன்கு பிசைந்து, ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும்.

பின்னர் மாவை, எலுமிச்சைப் பழம் அளவு எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போட்டு, நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

இதற்கு சைட் டிஷ் தேவையில்லை.

Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors