மலபார் பரோட்டா செய்முறை, parotta seimurai kurippu in tamil, tamil samayal kurippu

தேவையானபொருட்கள்

  • மைதா மாவு – அரை கிலோ
  • முட்டை (விருப்பப்பட்டால்) – ஒன்று
  • பால் – 100 மில்லி
  • தயிர் – 50 மில்லி
  • தூள் உப்பு, சர்க்கரை – தலா ஒரு டீஸ்பூன்
  • எண்ணெய், தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை

ஒரு பாத்திரத்தில் முட்டை, பால், தயிர், தூள் உப்பு, சர்க்கரை அனைத்தும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர், அதில் தண்ணீர் ஊற்றிக் கலக்கவும். அதனுடன் மைதா மாவை சேர்த்து நன்றாகப் பிசைந்து, சுமார் ஒன்றரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பின் அகலமான பரோட்டா பலகையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து அகலமாக கண்ணாடி போல் மெலிதாக சப்பாத்தி தட்டிக்கொள்ளவும். எவ்வளவு மெலிதாக மற்றும் பெரிதாக தட்டிக்கொள்ளகிறீர்களோ அவ்வளவு சுவையுடன் வரும். தட்டிய சப்பாத்தியை இருபக்கமும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்துக்கொண்டு வட்டமாக சுருட்டிக்கொள்ளவும். இவ்வாறு எல்லா உருண்டைகளையும் செய்து வைத்து அதன்மேல் திரும்பவும் ஈரத்துணியை போட்டு மூடி வைக்கவும்.

பின் கால்மணி நேரம் கழித்து ஒவ்வொரு உருண்டைகளையும் விசிறி மடிப்புகள் கலையாமல் சப்பாத்தி கட்டையால் தட்டி சூடான தோசைக்கல்லில் போட்டு இருபக்கமும் பொன்னிறமாக சிவக்க சுட்டு எடுக்கவும்.

சுடும் போது நெய் அல்லது எண்ணெய் தாராளமாக ஊற்றி சுட்டு எடுத்தால் பரோட்டா கடைகளில் வருவது போல் முறுகலாக மென்மையாக வரும். பரோட்டாகளை சுட்டெடுத்த பின் அவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக தட்டில் அடுக்கி இரு கைகளால் நன்கு அடித்து தட்டி பரிமாறினால் மென்மையாக இருக்கும்.

Loading...
Categories: Parotta Recipe In Tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors