மஷ்ரூம் கட்லட், Mushroom Cutlets seimurai, kadlad samayal kurippukal in tamil

தேவையானவை:

 • மொட்டுக் காளான் – 200 கிராம்
 • உருளைக்கிழங்கு – 200 கிராம்
 • பெரிய வெங்காயம் – 100 கிராம்
 • பச்சைமிளகாய் – 4
 • இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
 • கொத்தமல்லித்தழை மற்றும் புதினா – சிறிதளவு
 • கடலை மாவு – 6 டீஸ்பூன்
 • கரம் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன்
 • மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
 • மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
 • பிரெட் கிரம்ப்ஸ் – 100 கிராம்
 • உப்பு – தேவையான அளவு
 • எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

காளானை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துகொள்ளவும்.

காளான், வெங்காயம், பச்சைமிளகாய், கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி தனியே வைத்துக் கொள்ளவும்.

உருளைக்கிழங்கை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து, தோல் உரித்து மசித்துக்கொள்ளவும்.

பின்பு, வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, நறுக்கிய காளான், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை, புதினா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் சிறிதளவு உப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பச்சைவாசனை போகும் வரை நன்கு வதக்கித் தனியே வைத்துக் கொள்ளவும்.

இத்துடன் மசித்த உருளைக்கிழங்கைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.

கலவை சூடு ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.

உள்ளங்கையில் மாவு உருண்டையை வைத்து கட்லெட் வடிவத்துக்கு தட்டி, பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி, கடலை மாவை கட்லெட் மீது தூவவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கட்லெட்டை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

இதை தக்காளி சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும்.

Loading...
Categories: Samayal Tips Tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors