மஷ்ரூம் ப்ரைட் ரைஸ் செய்முறை!, mashroom fried rice recipe in tamil, tamil samayal kurippu

தேவையான பொருட்கள்

  • பாஸ்மதி அரிசி – 2 கப்
  • கொத்தமல்லி இலை – 2
  • பட்டர் / எண்ணெய – 1 மேசைக்கரண்டி
  • இஞ்சி – 1 மேசைக்கரண்டி
  • வெங்காயத் தாள் – 2 மேசைக்கரண்டி
  • பூண்டு – 1 மேசைக்கரண்டி
  • முந்திரி – 12 – 14
  • சர்க்கரை – 1 தேக்கரண்டி
  • குடை மிளகாய் – ½ கப் (நறுக்கியது)
  • பீன்ஸ் – ½ கப் (நறுக்கியது)
  • பட்டன் மஷ்ரூம் – 200 கிராம்
  • கரட் – ½ கப் (நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 3-4
  • தக்காளி சோஸ் – 1 மேசைக்கரண்டி
  • சோயா சோஸ் – 1 மேசைக்கரண்டி
  • வினிகர் – 1 தேக்கரண்டி
  • நல்ல மிளகு தூள் – 1 மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசியை பிரஷர் குக்கரில் வேக வைக்கவும். பின்பு அதனை வடிகட்டி ஆற வைக்கவும்

ஒரு சாஸ் பானில் பட்டர் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் செலரி பூண்டு மற்றும் இஞ்சி சேர்க்கவும். தீயை அதிகரித்து சிறிது நேரம் வதக்கவும்

இஞ்சியின் பச்சை வாசம் போனதும் முந்திரி பருப்பு மற்றும் வெங்காயத் தாள் சேர்க்கவும்

வெங்காயத்தின் நிறம் மாறியதும் கரட், பீன்ஸ் மற்றும் குடை மிளகாய் சேர்த்து நன்கு கிளறவும்

பின்பு மஷ்ரூம் சேர்த்து நன்கு கிளறவும். தீயை குறைக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டிருக்கவும்

1-2 நிடங்கள் கழித்து மஷரூமில் உள்ள நீர் வெளியேறும்

பின்பு தக்காளி சோஸ், சோயா சோஸ், வினிகர், நல்ல மிளகு தூள், மிளகாய் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்

இறுதியாக வேக வைத்த சாதம் சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்பு சிவப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அதனை மூடி வைத்து குறைந்த தீயில் வேக வைக்கவும். பின்பு தீயை அணைத்து அதன் மேல் வெங்காயத் தாள் சேர்க்கவும்

மஷ்ரூம் ப்ரைட் ரைஸ் தயார்!

Loading...
Categories: Healthy Recipes In Tamil, Rice Recipes In Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors