மாதவிடாய் காலங்களில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற…, Menstruation time health tips in tamil, tamil arokkiya kurippukal

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று. இதிலிருந்து மீண்டு நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் வேலை பார்க்க சத்தான உணவுகள் அவசியம். அவை என்னென்ன எனப் பார்ப்போமா?

மாதவிடாய் காலங்களில் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற…
மாதவிடாய் காலங்களில் அடி வயிற்றில் அதிக வலி இருக்கும். அதனால் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், வெண்டைக்காய், பாதாம் ஆகியவற்றை சாப்பிடுங்கள். மேலும் கண்டிப்பாக ஏதேனும் கீரைகளை சேர்த்துக் கொண்டால் படிப்படியாக இந்தப் பிரச்னைகள் குணமடையும்.

வைட்டமின் பி-6 நமது உடலில் ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை சரிசெய்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சின்ட்ரோம்’-ஐ குறைக்கிறது. வைட்டமின் டி எலும்புகளை வலுவாக்கிறது.

மாதவிடாய்க்கு முன்பு மேற்கூறிய வைட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கும் ஆரஞ்சு, நட்ஸ் வகைகள், வாழைப்பழம், மீன், தர்பூசணி, கீரை போன்றவற்றை சாப்பிடுங்கள். வலியில்லாத மாதவிடாய்க்கு தயாராக இந்த வைட்டமின்கள் தேவை.

பலர் மாதவிடாயின்போது கழிப்பறையை பயன்படுத்துவதை எரிச்சலான ஒரு விஷயமாக நினைத்து, அந்த நாட்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பார்கள். ஆனால் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறோமோ அந்த அளவுக்கு வயிற்றுவலி குறையும். தண்ணீருக்கு பதில் ஜூஸ்களையும் குடிக்கலாம்.

நாம் மகிழ்ச்சியாகவும், டென்ஷன் இல்லாமலும் இருக்க மூளையில் செரட்டோனின் என்ற அமிலச்சுரப்பு அவசியம். டார்க் சாக்லேட்டுகளைச் சாப்பிடுவதால் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோனான செராட்டோனின் அதிக அளவு சுரக்கிறது. அதனால் மாதவிடாயினால் ஏற்படும் டென்ஷன், பதட்டம் குறைய சாக்லேட் சாப்பிடுங்கள்.

அதிக கொழுப்புள்ள வெண்ணெய், கிரீம் போன்ற உணவுகள் பெண்களின் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனைத் தூண்டிவிடும். மாதவிடாய் காலத்தில் இதனால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் செரிமானப் பிரச்னையால் பலர் சாப்பிடவே மாட்டார்கள். இது தவறு. சாப்பிடாமல் இருப்பதால் கிராம்ப்ஸ்தான் அதிகம் வரும். அதனால் உணவில் பட்டாணி, கோதுமை, ரெட் பீன்ஸ், அவகாடோ, கொய்யா, ப்ராக்கோலி போன்றவற்றை சேர்த்துக்கொள்ள செரிமானம் எளிதாகி புத்துணர்ச்சியாக உணரலாம்.

மாதவிடாய் காலத்தில் உடல் சோர்வடைவது என்பது வாடிக்கையான ஒன்று.

இதனை ஆங்கிலத்தில் ‘ப்ரி மென்ஸ்ட்ரல் சிண்ட்ரோம்’ என அழைப்பர். பிரச்னை இருப்பவர்களுக்கு டென்ஷன், படபடப்பு, தலைவலி, கை, கால் வலி போன்ற பிரச்னைகளும் சேர்ந்துகொள்ளும். இதுதவிர வாந்தி, செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

அந்த சமயத்தில் ஓய்வு என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆனால் ஓய்வுக்கே நேரமில்லாமல் பரபரவென்று ஓடிக்கொண்டு இருக்கிறோம். மாதவிடாய் காலத்தில் இந்த விஷயங்களை பின்பற்ற வேண்டியது முக்கியம்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors