மாலை நேர ஸ்நாக்ஸ் காரசாரமான மொறுமொறு காராபூந்தி, Evening Snacks, kaaraa Boonthi, receipe in tamil. tamil language recepies

மாலை வேளையில் காப்பி, டீயுடன் ஏதேனும் காரமாக சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டால், சூப்பரான ஸ்நாக்ஸ் காராபூந்தியை செய்து சாப்பிடலாம்.

மாலை நேர ஸ்நாக்ஸ் காரசாரமான மொறுமொறு காராபூந்தி
தேவையான பொருட்கள்:

  • கடலை மாவு – 1 கப்
  • அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • சோடா உப்பு – 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
  • மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • வேர்க்கடலை – அரை கப்,
  • முந்திரி – தேவைக்கு,
  • கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

* ஒரு பெரிய பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, பேக்கிங் சோடா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, நன்கு அடர்த்தியாக பேஸ்ட் போல் கலந்து கொள்ளவும். அவ்வாறு கலக்கும் போது மாவுக் கலவையானது மிகவும் மென்மையாகவும், லேசான அடர்த்தியிலும் இருக்க வேண்டும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் விட்டு காய்ந்ததும், பூந்திக் கரண்டியை (சிறுசிறு துளைகள் உள்ள கரண்டி) எடுத்துக் கொண்டு, அந்த கரண்டியை எண்ணெயின் மேற்புறத்தில் வைத்து பிடித்துக் கொண்டு, அந்த கரண்டியில் கடலை மாவுக் கலவையை ஊற்ற வேண்டும்.

* அவ்வாறு ஊற்றும் போது அதிலிருந்து மாவானது, துளைகள் வழியாக எண்ணெயில் விழும், அதனை பொன்னிறமாக பொரித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். இதேப் போன்று அனைத்து மாவையும் ஊற்றி, பூந்திகளாக செய்துக் கொள்ளவும்.

* மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வேர்க்கடலை, முந்திரி, கறிவேப்பிலை போன்றவற்றை போட்டு பொரித்து, பூந்தியுடன் சேர்த்து, கிளற வேண்டும்.

* இப்போது சுவையான மொறுமொறு காராபூந்தி ரெடி!!!

Loading...
Categories: Snacks receipies in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors