மிருதுவான இட்லி செய்முறை, idly seimurai kurippu in Tamil, Tamil samayal kurippu

  • அரிசி – 4 கப்
  • உளுந்து – ஒரு கப்
  • வெந்தயம் – கால் தேக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு.

செய்முறை

அரிசி மற்றும் உளுந்தை இரண்டு முறை கழுவி, தண்ணீர் ஊற்றி தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.

முதலில், வெந்தயம் மற்றும் உளுந்தை கிரைண்டரில் போட்டு, மையாக அரைத்து எடுக்கவும்.

பிறகு, அரிசியை கிரைண்டரில் போட்டு அரைத்து எடுக்கவும் இதை, அரைத்துள்ள உளுந்து மாவுடன் சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு, தேவையான அளவு உப்பு சேர்த்து, கையால் நன்கு கலக்கி மூடிவைக்கவும். 8 மணி நேரம் மாவு புளிக்கட்டும். பிறகு, இட்டி தட்டில் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்து, அதன் குழிகளில் மாவை ஊற்றவும்.

இட்லி பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தட்டுகளை வைத்து, அடுப்பில் வைக்கவும். 10 நிமிடங்கள் கழித்து இட்லி வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

குறிப்பு

இட்லிக்கு அரைக்கும் மாவுடன் சிறிது பழைய சோறு சேர்த்து அரைத்தால், பூபோன்று இருக்கும்.

வேகவைத்து எடுத்த சூடான இட்லியின் மீது, சிறிது நல்லெண்ணெய் எண்ணெய் சேர்த்து பரிமாறினால், கூடுதல் சுவையுடன் இருக்கும்.

உளுந்து அரைக்கும்போது, அதிகப்படியான தண்ணீர் ஊற்றக்கூடாது.

அரிசியை அரைக்கும்போது, சிறிது அவல் சேர்த்தால், இட்லி பூபோன்று இருக்கும்.

குக்கர் இட்லியைவிட, இட்லி தட்டில் துணி விரித்து ஆவியில் வேகவைக்கும் இட்லி சுவையாக இருக்கும்.

Loading...
Categories: idli Vagaigal In Tamil, Samayal Tips Tamil, Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors