மிளகு பத்திய குழம்பு, milaku paththiya kulampu receipe , in tamil

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 2
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – சுவைக்கு

வறுத்து பொடிக்க :

சீரகம் – 1 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 1/2 ஸ்பூன்
மிளகு – 1 1/2 ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

தாளிக்க :

நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
கடுகு
பூண்டு – 10 பல்
காய்ந்த மிளகாய் – 3

செய்முறை :

* முருங்கைக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

* அடி கனமாக பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் முருங்கைக்காயை போட்டு வேக வைக்கவும்.

* புளியை கரைத்து கொள்ளவும்.

* வறுத்து பொடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வெறும் வாணலியில் போட்டு (தனித்தனியாக) வறுத்து ஆறவைத்தபின் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

* முருங்கைக்காய் பாதி வெந்தவுடன் அதில் புளி கரைசல், கறிவேப்பிலை, உப்பு போடவும்.

* அடுத்து அதில் அரைத்த பொடியில் 2 1/2 ஸ்பூன் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

* குழம்பு பக்குவத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.

* விருப்பப்பட்டால் மற்றொரு கடாயில் 3 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, பூண்டு, காய்ந்த மிளகாய் போட்டு நன்றாக வதக்கி குழம்பில் சேர்க்கவும்.

* சத்தான மிளகு பத்திய குழம்பு ரெடி.

குறிப்பு :

குழந்தை பெற்றவர்களுக்கும், சளி, இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த மிளகு பத்திய குழம்பு மிகவும் நல்லது. இந்த குழம்பிற்கு காய் எதுவும் சேர்க்க தேவையில்லை. முருங்கைக்காய் விருப்பம் இல்லாதவர்கள் சேர்க்க வேண்டாம்.

Loading...
Categories: Veettu Kurippugal TIps, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors