முட்டை குழம்பு, egg kulambu seimurai vilakkam in tamil, tamil samayal muddai kulambu kurippu

தேவையான பொருள்கள்

 • முட்டை – 5
 • தக்காளிப் பழம் – 4 (2 cup)
 • பெரிய வெங்காயம் – 2 (1 cup)
 • பச்சை மிளகாய் – 3
 • மல்லி, புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
 • மஞ்சள் தூள் – 1 tea spoon
 • மிளகாய் தூள் – 1 tea spoon
 • மல்லி தூள் (தனியா) – 3 table spoon
 • மிளகு தூள் – 2 tea spoon
 • கறி மசால் தூள் – 2 tea spoon
 • சோம்பு தூள் – 2 tea ஸ்பூன்
 • எண்ணெய் – 30ml

  செய்முறை
 • மூன்று முட்டைகளை வேக வைத்து கூட்டை நீக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மல்லி, புதினா இலையை காம்பு நீக்கி சிறிதாக அரிந்து கொள்ளவும்.
 • எண்ணையை காய வைத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கவும். இத்துடன் மிளகாயை இரண்டாக ஒடித்து போடவும்.
 • மஞ்சள், மிளகாய், தனியா தூள், கறி மசால் கலந்து கிளறவும். சற்று வெந்தவுடன், இரண்டு கப் தண்ணீர் சேர்த்து மிதமான சூட்டில் வைக்கவும்.
 • தண்ணீர் சூடானவுடன் இரண்டு முட்டைகளை மெதுவாக உடைத்து ஊற்றவும்.
 • மிதமான சூட்டில் இன்னும் சிறிது நேரம் உடைத்த முட்டை கட்டியாகும் வரை சூடக்கிவிட்டு, பின்பு வேக வாய்த்த முட்டைகளை இரண்டாக நறுக்கி சேர்க்கவும்.
 • இப்போது சூட்டை கூட்டி வைக்கலாம். தண்ணீர் வற்றியதும், சோம்பு, மிளகு தூள் சேர்க்கவும்.
 • மல்லி, புதினா இலை தூவி இறக்கவும்
Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors