முயன்று பாருங்கள் வெஜ் பீட்சா, Veg petza seimurai kurippu, in tamil language samayal kurippukal

பீட்சா…

 • மைதா – 2 கப்,
 • உப்பு, ஈஸ்ட், சர்க்கரை – தலா 1/2 டீஸ்பூன்,
 • எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
 • வெது வெதுப்பான தண்ணீர் – 1/4 கப்.

டாப்பிங் செய்ய…

 • சீஸ் துருவல் – 1 கப்,
 • தக்காளி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
 • பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,
 • சிவப்பு, பச்சை குடைமிளகாய் – தலா 1/4 கப்,
 • ஸ்வீட்கார்ன் – 1/4 கப்,
 • சில்லி ஃபிளேக்ஸ் – சிறிது,
 • வட்டமாக நறுக்கிய கருப்பு ஆலிவ் விதை – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

பாத்திரத்தில் சர்க்கரை, ஈஸ்ட், சுடு தண்ணீர் சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு கலந்து ஈஸ்ட் தண்ணீரை ஊற்றி நன்றாக பிசைந்து மேலே எண்ணெய் தடவி ஈரத்துணி கொண்டு மூடி 2 மணி நேரம் வைக்கவும்.

பின்பு அதை 4 உருண்டைகளாக உருட்டி அரை மணி நேரம் வைத்து, பீட்சா பேஸ் போல வட்டமாக தேய்த்து, சூடான தோசைக்கல்லில் போட்டு வேகவைத்து எடுக்கவும்.

ஓவன் என்றால் 10-15 நிமிடம் 150 டிகிரி செல்சியஸ் வேகவைத்து எடுத்தால் பீட்சா பேஸ் ரெடி.

டாப்பிங் செய்ய…

பீட்சா பேஸ் மேல் தக்காளி சாஸ் ஊற்றி பரவலாக தடவி, அதன் மேல் சீஸ் துருவல், வெங்காயம், குடைமிளகாய், ஆலிவ் விதை, ஸ்வீட்கார்ன் போட்டு, அதன் மீது சில்லிஃபிளேக்ஸ் தூவி சூடான தோசைக்கல்லில் வைத்து 5 நிமிடம் சீஸ் உருகும் வரை மூடி வைத்து இறக்கி சூடாக பரிமாறவும்.

Loading...
Categories: Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors