மூங்கில் அரிசி தேங்காய்ப்பால் கஞ்சி, bamboo rice recipe in tamil

தேவையான பொருட்கள்:

மூங்கில் அரிசி – 100 கிராம்
தேங்காய்ப்பால் – 200 மி.லி.
கருப்பட்டி – 150 கிராம்
சுக்கு – சிறிய துண்டு
ஏலக்காய் – 3
தண்ணீர் 500 மி.லி.

செய்முறை:

  1. மூங்கில் அரிசியை வாசனை வரும்வரை வறுத்து ரவை பதத்துக்குப் பொடித்துக் கொள்ளவும். சுக்கு, ஏலக்காயை லேசாக வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
  2. கருப்பட்டியை 200 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டவும்.
  3. அடி கனமான பாத்திரத்தில் 300 மி.லி. தண்ணீரை ஊற்றி அதில் பொடித்த மூங்கில் அரிசியைச் சேர்த்து 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும். அதில் கருப்பட்டி கரைசலை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும்.
  4. பின்னர் அத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து கொதி வந்ததும் சுக்கு-ஏலக்காய் பொடியைத் தூவி இறக்கவும்.
  5. மூங்கில் அரிசி தேங்காய்ப்பால் கஞ்சி தயார். மிதமான சூட்டில் கஞ்சியைப் பருகலாம்.
Loading...
Categories: Soup Recipe In Tamil

Leave a Reply


Sponsors