மூளையை சுறுசுறுப்பாக வைக்கும் காலை நேர உணவுகள், breakfast health unavukal ,tamil samayal kurippu, in tamil

காலை உணவை தவிர்ப்பதால் பல ஆரோக்கிய பிரச்சனைகளை நாம் சந்திக்ககூடும். ஆனால், இன்றைய நவீன உலகில் காலை உணவை தவிர்க்கும் இளைய தலைமுறையினர்கள் ஏராளம். அவ்வாறு நாம் காலை உணவை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் அந்த உணவு சரிவிகித உணவாக இருக்க வேண்டும். குறிப்பாக, காலையில் மூன்று வகையான உணவுகள் இடம் பெற்றால் மூளையின் ஆற்றல் நன்றாக இருக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மூன்று வகை

உணவுகள்:

 • முழுத்தானிய உணவால் செய்யப்பட்ட சாண்ட்விச், பாலாடைக்கட்டி, ஆப்பிள், அல்லது
  தக்காளித் துண்டுகள், கோதுமை சாப்பாத்தி, காய்கறி அவியல், தயிர் ஒரு கோப்பை அல்லது
  கோதுமை ரவை, பால், பழத்துண்டுகள் என்று எளிமையாக இருந்தால் போதும்.
  பழங்களைத் தேர்வு செய்யும்போது மட்டும் விட்டமின் சி தாராளமாக உள்ள பழங்களையே தேர்வு செய்ய வேண்டும். ஏனென்றால், விட்டமின் சி இருந்தால்தான் வளர்சிதை மாற்றம் விரைவாக நடந்து மூளைக்கு ஆக்ஸிஜன் தொடர்ந்து கிடைக்கும். ஆப்பிள் உட்பட எந்த ஒரு பழமும் காலையில் சாப்பிடவில்லை என்றால் பரவாயில்லை. தக்காளிப் பழம் ஒன்றை அவசியம் சாப்பிடவும். இதில் விட்டமின் சி தாராளமாக இருக்கிறது.

 

 • இட்லி, தோசை, சம்பா ரவை, சோளவறுவல், தவிடு நீக்காத கோதுமையில் செய்த சப்பாத்தி, கேழ்வரகு ரொட்டி, பொங்கல் போன்ற முழுத் தானிய உணவுகள் மூலம் விட்டமின் சி கிடைக்கும். மாவுச்சத்தும், பால், தயிர் போன்றவற்றின் மூலம் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தும் முறையே மூளையையும், நரம்பு மண்டலத்தையும் அமைதிப்படுத்தி ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது. காய்கறிகளில் மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் விட்டமின்களும் மூளையைத் துடிப்புடன் செயல்பட உதவுகின்றன.

 

 • அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளித் துண்டுகள் என்று சாப்பிடலாம். இவை உடனே செரிமானம் ஆக உதவும். இல்லையேல் மிக எளிய வழி, எலுமிச்சம் பழச்சாறுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அருந்துவது. காலை உணவில் பால் அல்லது தயிர் சேர்த்துக் கொண்டால் பழத்துண்டுகளாகச் சாப்பிடலாம். பழச்சாறாக அருந்தினால் பாலாடைக்கட்டி சேர்க்கலாம்.
  அல்லது முதலில் தயிர் அல்லது பால் சாப்பிட்டுவிட்டு, இரண்டாவதாக முழுத்தானிய உணவு, மூன்றாவதாக பழம் அல்லது பழச்சாறு சாப்பிடலாம். சப்பாத்தி, ரவை முதலியவற்றில் தாராளமாக இல்லாத லைசின், இட்லியில் தாராளமாக இருக்கிறது. இதனால்தான் நீரிழிவு நோயாளியும் காலையில் இட்லி சாப்பிடுவதால் மூளை சோர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். நாம் காலை உணவை சரியான விகிதத்தில் எடுத்துக்கொண்டால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கலாம்.
Loading...
Categories: arokiya unavu in tamil, Healthy Recipes In Tamil

Leave a Reply


Sponsors