ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம், ramlan special, egg watlappam recipe in tamil, tamil samayal kurippu

மிகவும் சுவையான சத்தான சத்தான முட்டை வட்லாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்
தேவையான பொருட்கள் :

முட்டை – 15,
தேங்காய் – 1,
முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா – (தலா) 10 கிராம்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
சர்க்கரை – கால் கிலோ,
ஏலக்காய் – 5 (பொடி செய்து கொள்ளவும்)

செய்முறை :

* முதலில் முந்திரி, பாதாம், பிஸ்தாவை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கிப் பொடியாக நறுக்கவும்.

* சர்க்கரையை மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி வைக்கவும்.

* தேங்காயைத் துருவி, கெட்டியாகப் பால் எடுக்கவும்.. (துளி தண்ணீர் கூட சேர்க்கக் கூடாது).

* முட்டையை நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

* சர்க்கரை, தேங்காய்ப் பால், முட்டை மூன்றையும் நன்கு கலக்கவும். தேங்காய்ப் பால், முட்டையை கட்டியில்லாமல் நன்றாக வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்

* ஏலக்காயை பிரித்து, உள்ளே உள்ள விதையை எடுத்து லேசாக வறுத்துப் பொடித்து தேங்காய் பால் கலவையில் சேர்க்கவும்.

* அடுத்து அதில் நெய், பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தாவை போட்டு நன்றாக கட்டியில்லாமல் கலக்கவும்.

* குக்கரில் உள்ளே வைக்கும் அளவில் உள்ள பாத்திரத்தில் கலவையை ஊற்றி வைக்கவும்

* குக்கரில் அடியில் வைக்கும் தட்டை உள்ளே வைத்து அதன் மேல் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து மூடிபோட்டு குக்கரை மூடி 10 விசில் விட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து அவிக்கவும். கத்தியால் குத்தி பார்த்தால் தண்ணீரில்லாமல் கேக் மாதிரி வெந்திருக்கும்.

* சுவையான, சத்தான முட்டை வட்லாப்பம் ரெடி.

Loading...
Categories: ramalan samayal in tamil, Samayal Tips Tamil

Leave a Reply


Sponsors