ரஸமலாய் கஸாட்டா, rasamalaai gasatta recipe in tamil, tamil samayal kurippu

என்னென்ன தேவை?

தயாரிக்கப்பட்ட ரஸமலாய் – 10,
ஸ்பான்ஞ் கேக் – 3 ஸ்லைஸ்கள்,
ஐஸ்கிரீம் – ஏதேனும் 3 வகை,
சாக்லெட் சாஸ் – மேலே அலங்கரிக்க.


எப்படிச் செய்வது?

ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் முதலில் ஒரு லேயர் கேக்கைப் பரத்தவும்.

அதன் மேல் ஒரு லேயர் ஐஸ்கிரீமைப் பரத்தி லேசாக அழுத்தவும்.

பிறகு ஒரு லேயர் ரஸமலாயை வைக்கவும். அதன் மேல் மற்றொரு லேயர் கேக்கை பரத்தவும்.

கேக்கின் மேல் ஐஸ்கிரீம், அதன் மேல் ரஸமலாய் என்று வைக்கவும்.

பிறகு மேலே சாக்லெட் சாஸினால் அலங்கரித்து ஃப்ரீசரில் வைத்து செட் செய்யவும்.

இரண்டு மணி நேரம் கழித்து ஸ்லைஸ் செய்து பரிமாறவும்

Loading...
Categories: cake samayal kurippugal in tamil, சிற்றுண்டி

Leave a Reply


Sponsors