ருசியான அவல் போண்டா செய்வது எப்படி?!, Aval Bonda seimurai in tamil language

தேவையான பொருட்கள்:

  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு,
  • தட்டை அவல் – ஒரு கப்,
  • எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு,
  • உருளைக்கிழங்கு – ஒன்று,
  • பச்சை மிளகாய் – 3,
  • தயிர் – 2 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு, சீரகம், பெருங்காயத்தூள் – தேவையான அளவு.

செய்முறை :

*  அவலை சுத்தமாக கழுவி நன்றாக ஊறவைக்கவும்.

*  உருளைக்கிழங்கை கொழகொழப்பாக வேக வைத்து மசித்து எடுத்துக்கொள்ளவும்.

 

* பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடி,பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

 

* ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த அவலை தண்ணீரை நன்றாக வடித்துவிட்டு போடவும், அதனுடன் உருளைக்கிழங்கு, மிளகாய், கொத்தமல்லி, உப்பு, தயிர், சீரகம், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் தெளித்து, நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும்.

 

* இந்த மாவை போண்டா சைஸில் உருண்டைகளாக பிடித்து அடுப்பில் காயவைத்த எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறினால், சுவையான அவல் போண்டா தயார்.

 

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors