ருசியான சாக்லேட் கேக் தயார்…, tasty chocolatecake, receipe in tamil

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு, கோகோ பவுடர் – தலா கால் கப்,
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்,
இன்ஸ்டன்ட் காபி பவுடர் – அரை டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – அரைக்கால் டீஸ்பூன்,
பால், சாக்லேட் சிப்ஸ் – தலா அரை கப்,
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

மைக்ரோவேவ் கப்பில் கோதுமை மாவு, கோகோ பவுடர், சர்க்கரை, இன்ஸ்டன்ட் காபி பவுடர், பேக்கிங் பவுடர், பால், சாக்லேட் சிப்ஸ், வெண்ணெய், வெனிலா எசன்ஸ், உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். இவற்றை மைக்ரோவேவ் அவனில் ஒன்றரை நிமிடங்கள் முதல் 2 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால், சாக்லேட் கேக் தயார்.

Loading...
Categories: cake samayal kurippugal in tamil

Leave a Reply


Sponsors