லெமன் இடியாப்பம், Lemon Idiyappam, receipe in tamil

என்னென்ன தேவை?

இடியாப்ப மாவு – 2 கப்,
எலுமிச்சம் பழம் – 1,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க…

கடுகு, உளுந்தம்பருப்பு,
கடலைப்பருப்பு – தேவையான அளவு,
பெருங்காயத்தூள் – சிறிது,
கறிவேப்பிலை – சிறிது,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை.

எப்படிச் செய்வது?

தண்ணீரை மளமளவென கொதிக்க வைத்துக் கொள்ளவும். இடியாப்ப மாவில் உப்பு சேர்த்து கலந்து கொதிக்கும் தண்ணீரை ஊற்றி மத்தினால் கிளறி மாவை பிசைந்து கொள்ளவும். அச்சில் போட்டு கொடி கொடியாக இடியாப்பம் பிழிந்தெடுத்து, ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து, பெருங்காயத்தூள்,கறி வேப்பிலை, மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பை நிறுத்தி இறக்கவும். இப்பொழுது எலுமிச்சைச் சாறு சேர்த்து, ஆறிய இடியாப்பத்தில் கொட்டி கலந்து உதிரியாக பிசறி பரிமாறவும்.

Loading...
Categories: Tamil Cooking Tips

Leave a Reply


Sponsors