வாணியம்பாடி அகமதியா பிரியாணி, Briyani recipe in tamil tamil cooking tips in tamil

தேவையான பொருட்கள் 
வெள்ளாட்டு கறி 500 கிராம்
மட்டன் கொழுப்பு 150 கிராம்
மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
இஞ்சி விழுது 3 மேஜைக்கரண்டி
பூண்டு விழுது 4 1/2 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 10
சின்ன வெங்காயம் 200 கிராம் ( அம்மியில் நசுக்கியது )
பழுத்தக்காளி 200 கிராம் ( விழுதாக அரைத்தது )
தயிர் 1 மேஜைக்கரண்டி
எலுமிச்சை பழச்சாறு 3 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை ஒரு கைப்பிடி
புதினா இலை ஒரு கைப்பிடி
கெட்டியான தயிர் 1/4 கப்
மரசெக்கு கடலெண்ணய் 8 மேஜைக்கரண்டி
வாணியம்பாடி சந்தை உப்பு தேவையான அளவு

ஸ்பைசஸ்
கிராம்பு 9
பட்டை 6 இன்ச்
அண்ணாச்சி மொக்கு 1
காஜ்ஜூபத்திரி பூ 1
ஏலக்காய் 3
பிரிஞ்சி இலை 2

அரிசி 
இந்தியா கேட் சுப்ரீம் பாஸ்மதி அரிசி 500 கிராம்
தண்ணீர் 3 1/2 கப்
வாணியம்பாடி சந்தை உப்பு தேவையான அளவு

செய்முறை
1. வரமிளகாயை வெதுவெதுப்பான தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு அம்மியில் சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

2. அகன்ற கெனமான பாத்திரத்தில் மரசெக்கு கடலெண்ணய் ஊற்றி நன்கு காய்ந்ததும் அதில் கெட்டியான தயிர் ஒரு மேஜைக்கரண்டி ஊற்றவும் அது கொஞ்சம் வெடித்து நிறுத்தும்.

3. வெடித்து நிறுத்தும் சமயத்தில் பட்டை , கிராம்பு, ஏலக்காய், அண்ணாச்சி மொக்கு மற்றும் காஜ்ஜூபத்திரி சேர்த்து நன்றாக சிறுதீயிலையே நன்றாக மணம் வீசும் வரை வதக்கவும்.

4. அம்மியில் நசுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும்.

5. இப்போது அடுப்பை சிறுதீயிலையே வைத்து பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை 3-4 நிமிடங்கள் வரை வதக்கவும்.

6. அடுத்த இஞ்சி விழுதையும் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

7. அதில் வரமிளகாய் விழுதையும் சேர்த்து சில நிமிடங்கள் வரை வதக்கவும்.

8. அதில் மஞ்சள் தூளையும் சேர்த்து அதனுடன் தக்காளி விழுதையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

9. இப்போது சுத்தமாக கழுவி வைத்துள்ள வெள்ளாட்டு கறியை போடவும் அதில் கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலைகளை போட்டு நன்றாக வதக்கவும்.

10. இதனுடன் 1/4 கப் தயிரை ஊற்றி நன்றாக வதக்கவும்.

11. பிறகு இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கறியை வேகவைக்க வேண்டும்… இந்த சமயத்தில் தேவையான கல் உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்.

12. பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும்.

13. அதே சமயத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு , ஏலக்காய் 3 , கிராம்பு 2 சேர்த்து கொதிக்க விடவும்.

14. தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் ஊறவைத்து உள்ள பாஸ்மதி அரிசியை போட்டு பாதி வேக்காடு வேக வைக்க வேண்டும்.

15. பாதி வேக்காடு வெந்ததும் அதில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும்.

16. இப்போது இந்த வடித்த பாஸ்மதி சாதத்தை வெள்ளாட்டு கறி மசாலாவில் சேர்த்து கிளறவும்.

17.இப்போது தோசை கல்லை அடுப்பு மேல் வைத்து அதன் மேலே அந்த பிரியாணி பாத்திரத்தை வைத்து கொஞ்சம் நேரம் மேலே ஒரு பாத்திரத்தின் மேல் ஒரு தட்டை மூடி 15 நிமிடங்கள் வரை தம் போடவும்.

18. பிறகு பாத்திரத்தில் இருந்து பிரியாணியை எடுத்து சுடச்சுட பரிமாறவும்.

Loading...
Categories: Biryani Recipes Tamil

Leave a Reply


Sponsors