வித்தியாசமான சோயா மீட் கட்லட் செய்முறை!,soya meat kadlad receipe in tamil

தேவையான பொருட்கள்

மீல் மேக்கர் – 100 கிராம்
பொட்டுக் கடலை மாவு – அரை கப்
பெரிய வெங்காயம் – 1
கரம் மசாலா – ஒரு தேக்கரண்டி
கறி மசாலா – ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

சோம்பு, சீரகத்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூம் – கால் தேக்கரண்டி
சோள மாவு – ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி
புதினா
கறிவேப்பிலை
எண்ணெய்
உப்பு


செய்முறை

ஒரு கிண்ணத்தில், பொட்டுக் கடலை மாவு, சோள மாவு, மஞ்சள் தூள், சோம்பு & சீரகத்தூள், கறி மசாலா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லி,, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு, வெந்நீரில் கேவ வைத்து பொடியாக நறுக்கிய மீல் மேக்கர், உப்பு சேர்த்து வடை பதத்திற்கு தயார் செய்துக் கொள்ளவும்.

இடையே, வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

கலவையில் இருந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைப்போல் தட்டி, சூடான எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்

Loading...
Categories: சிற்றுண்டி

Leave a Reply


Sponsors