வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்!…, homely easy tooth paste tips in tamil

பற்களை சுத்தம் செய்வதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த டூத்பேஸ்ட்டுகளை பயன்படுத்தி தினமும் இருமுறை பற்களைத் துலக்கினால் மட்டும் வாயின் ஆரோக்கியம் மேம்படாது.

ஈறு நோய்கள் மற்றும் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்க வீட்டிலேயே ஓர் அற்புதமான டூத் பேஸ்ட்டை தயாரிக்கலாம்.

மேலும் இந்த பேஸ்ட்டானது, முழுமையாக இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கக் கூடியது ஆகும்.

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
புதினா எண்ணெய் – 2 துளிகள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

தயாரிக்கும் முறை

தேங்காய் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மற்றும் புதினா எண்ணெய் 2 துளிகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பேஸ்ட் போல செய்து கொள்ள வேண்டும்.

பின் தயார் செய்த பேஸ்ட்டை கொண்டு எப்போதும் போல பற்களை நன்றாக துலக்க வேண்டும்.

குறிப்பு

இயற்கை முறையில் தயாரித்த இந்த பேஸ்ட்டை கொண்டு பற்களைத் துலக்கும் போது, நுரை ஏதும் வராது. இதனால் இந்த பேஸ்ட் பயன்படுத்துவதை நிறுத்தக் கூடாது.

Loading...
Categories: arokiya unavu in tamil, Azhagu Kurippugal, Beauty Tips Tamil

Leave a Reply


Sponsors