வீட்டில் இலகுவாக செய்ய சுவையான அசோகா அல்வா செய்முறை, asoka alva recipe in tamil

குழந்தைகளுக்கு சுவையும், சத்தும் அளிக்கும் வண்ணம் அசோகா அல்வா எப்படி தயாரிப்பது என இங்கு பார்ப்போம்.

வீட்டிலேயே எளிதாக செய்யலாம் அசோகா அல்வா
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் குழந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. எப்போதும் துறுதுறு என விளையாடும் குழந்தைகள் ஏதேனும் நொறுக்குத் தீணி வேண்டும் என அடம்பிடிப்பது வழக்கம். அவர்களுக்கு சுவையும், சத்தும் அளிக்கும் வண்ணம் அசோகா அல்வா எப்படி தயாரிப்பது என இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பயற்றம் பருப்பு 1 கப்
சர்க்கரை 3 கப்
கோதுமைமாவு 1/4 கப்
ரீபைன்ட் ஆயில் அல்லது நெய் 2 கப்
முந்திரி கொஞ்சம்
கிராம்புப் பொடி 1/2 டேபிள்ஸ்பூன்
கேசரி பவுடர் கொஞ்சம் (வேண்டும் என்றால் போடலாம்)

செய்முறை:

பயற்றம் பருப்பை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் நன்கு குழையும் வண்ணம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு சிறிது நெய் விட்டு முந்திரி பருப்பை வறுக்கவும். சிறிது எண்ணெய்யில் கோதுமை மாவை சிவக்க வாசனை வரும் வரை வறுக்கவும்.
கோதுமையுடன் வேக வைத்த பருப்பு, சக்கரை, கேசரி பவுடர் சிறிதளவு, கிராம்புப் பொடி சேர்த்து கிளரவும். நன்கு சுருண்டு வந்தவுடன் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறலாம்.

Loading...
Categories: kulanthai unavugal in tamil, Samayal Tips Tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors