வேக வைத்த முட்டை வறுவல் செய்முறை, egg varuval recipe in tami, tamil cooking tips

தேவையான பொருட்கள்

  • முட்டை – 4
  • மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி,பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை
முட்டைகளை வேக வைப்பதற்கு இட்லி பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.

இட்லி அவிக்கும் தட்டுகள் இரண்டு எடுத்து கொள்ளவும். அதில் ஒரு தட்டில் எண்ணெய் கொஞ்சம் தடவி முட்டைகளை ஓவ்வொன்றாக உடைத்து ஊற்றவும்.

பின்பு இட்லி பாத்திரத்தில் முதலில் வெறும் தட்டை வைத்து, அதன் மேல் முட்டை ஊற்றிய தட்டை வைத்து மூடி 7 அல்லது 8 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

பாத்திரம் ஒன்றில் மிளகாய்த்தூள், மல்லித்தூள்,மஞ்சள் தூள்,மசாலா தூள்,இஞ்சி பூண்டு விழுது,உப்பு, மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கலவை செய்யவும்.

கலவையில் ஒவ்வொரு முட்டைகளாக தோய்த்து எடுத்து 10 நிமிடங்கள் வைக்கவும்.

பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டைகளை இரண்டு பக்கங்களில் நன்கு வறுத்து எடுக்கவும்.

சுவையாக பொய்ல்ட் எக் ப்ரை தயார்!

Loading...
Categories: Healthy Recipes In Tamil, Samayal Tips Tamil, அசைவம்

Leave a Reply


Sponsors